தவறான ஊசிபோட்டதால் இளம்பெண் உயிரிழப்பு..!!

பெரம்பலூர் அருகே மருந்துக்கடைக்காரர் ஊசி போட்டதால் பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்த கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரவன். டி.பார்ம் படித்துள்ள இவர், அதே ஊரில் ஆங்கில மருந்து கடை நடத்தி வருகிறார்.

அத்துடன் சிறு சிறு நோய்களுக்கு ஊசி போட்டு மாத்திரை கொடுப்பதையும் செய்து வந்துள்ளார் .

இந்நிலையில், சளி மற்றும் இருமல் பிரச்னையுடன் வந்த சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்ற 35 வயது பெண்ணுக்கு, கை நரம்பில் கதிரவன் ஊசி போட்டதாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த தமிழ்ச்செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தமிழ்ச்செல்வியின் உறவினர்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு சென்ற போலீசார் தமிழ்ச்செல்வின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே மருந்துக் கடை உரிமையாளர் கதிரவனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

ஊசி போட்டதால் உயிரிழந்த தமிழ்ச்செல்வியின் கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால், தனது 2 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

தற்போது தமிழ்ச் செல்வி இறந்துவிட்டதால், அவரது பிள்ளைகள் ஆதரவற்று நிற்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே