தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷன், சந்திரசூட், அப்துல் நசீர் நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒத்த கருத்துடைய தீர்ப்பை வழங்கினர்.
ஒரு மதத்தினரின் நம்பிக்கை, மற்றொரு மதத்தினரின் நம்பிக்கையை தடுக்கக் கூடாது.
அயோத்தியில் காலி இடத்தில் மசூதி கட்டப்படவில்லை.
பாபர் மசூதி அமைவதற்கு முன்பே அந்தப் பகுதியில் கட்டிடம் இருந்ததற்கான சான்றுகள் தொல்லியல் துறையின் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
மசூதியின் அடித்தளத்தில் இருக்கும் கட்டமைப்புகள் இஸ்லாமிய முறைப்படி இல்லை.
12-வது நூற்றாண்டு காலத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளதாக தொல்லியல் சான்றுகள் கூறுகிறது.
கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் நிலத்தின் உரிமையாளர் யார் என்பதை தீர்மானிக்க முடியாது. சட்டத்தின் அடிப்படையில்தான் தீர்ப்பு காண முடியும்.
ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே ராமர் மற்றும் சீதாவை இந்துக்கள் வணங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன.
சர்ச்சைக்குரிய நிலத்திற்கு ஒட்டு மொத்தமாக சன்னி வஃபு வாரியம் உரிமை கோர முடியாது.
சர்ச்சைக்குரிய நிலத்தின் முற்றத்தை இந்துக்கள் வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். சன்னி வாரியத்திற்கு அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்.
நிலத்திற்கு உரிமை கோரும் ராம் லல்லாவின் மனு மட்டுமே ஏற்கக் கூடியது.
அயோத்தி வழக்கில் 3 பிரிவினருக்கு பிரித்து வழங்க வேண்டும் என்ற அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது.
அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்திற்கான உரிமை மத்திய அரசிடம் இருக்க வேண்டும்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அறக்கட்டளையை உருவாக்க வேண்டும்.
அயோத்தியில் ராமஜென்மபூமியில் ராமர் கோவில் கட்ட அனுமதி.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராமஜென்மபூமி அறக்கட்டளையிடம் ஒப்படைக்க உத்தரவு.