“நடிகர் தனுஷ் எங்கள் மகன்” : மேலூர் தம்பதியின் மனு ஒத்திவைப்பு

நடிகர் தனுஷை தங்கள் மகன் என உரிமை கோரி மதுரை தம்பதி தொடுத்த வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.

கதிரேசன்-மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ், தங்கள் மூத்த மகன் என உரிமை கோரி மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

அவ்வழக்கை ரத்து செய்யக்கோரி தனுஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவை ஏற்று மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன் தம்பதி தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து மதுரை தம்பதி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தது. அதில் தனுஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ் போலியானது என கூறி தாங்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்து இருந்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் இவ்வழக்கை கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது நான்கு வார காலத்திற்கு விசாரணையை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே