BREAKING NEWS : ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் உள்ளாட்சி தேர்தல்..!!

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 9 மாவட்டங்கள் தவிர்த்து பிற 27 மாவட்டங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திமுக உள்ளிட்ட 12 தரப்பினர் புதிய மாவட்டங்களை வரையறை செய்யாமல் தேர்தல் நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிதாக உருவாக்கப்பட்ட மற்றும் பிரிவினைகளுக்கு உள்ளான தென்காசி, நெல்லை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் தேர்தல் நடத்த அனுமதி அளித்தது.

மேற்கண்ட 9 மாவட்டங்களில் 4 மாதத்திற்குள் வார்டு மறுவரையறை பணிகளை முடித்து தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டது.

இதனை அடுத்து ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்தல் அறிவிப்பானையை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றது.

இதனால் தேர்தல் தேதி மாறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் 9 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கும் என்று அறிவித்தார்.

நாளை மறுநாள் இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜனவரி 2ம் தேதி எண்ணப்படும் என்றும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே