தெலங்கானா என்கவுண்டர் பற்றி நயன்தாரா அதிரடி அறிக்கை

தெலங்கானா என்கவுண்டர் சரியாக வழங்கப்பட்ட நீதி என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.

தெலுங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி எரித்துக் கொன்ற 4 பேரையும், நேற்று அம்மாநில போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

இதற்கு திரைத்துறையினர் பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் நடிகை நயன்தாரா, சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை.

இந்த கூற்று உண்மையாகியிருக்கிறது உண்மையான நாயகர்களால்.

தெலங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள்.

காட்டுமிராண்டிகளின் சட்டத்துக்கு புறம்பாக பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராக தீர்க்கமான பதிலளித்துள்ளார்கள்.

பெண்களின் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை.

இந்த நடவடிக்கை என்பது சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே நியாயமான மனிதமிக்க நடவடிக்கை என அழுத்தி சொல்வேன் என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே