ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு முன் விளக்கு ஏற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டார் முதல்வர்..!!

முதல்வர் பழனிசாமி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில், ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு முன் குடும்பத்துடன் தீபம் ஏற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் சேர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில், மக்களை கண்போல் காத்த கடவுள் அம்மாவின் பிறந்தநாள் அன்று நீங்கள் ஒவ்வொருவரும் ‘என் இல்லம் அம்மாவின் இல்லம்’ என்று உளமார நினைத்துக் கொண்டு உங்கள் வீடுகளில் சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி, அம்மாவின் ஆன்மாவிடம் பிரார்த்தனை செய்து, உறுதிமொழி எடுத்துக் கொள்ளுமாறு கூறியிருந்தார்.

அதன்படி, ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி முதல்வர் பழனிசாமி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில், ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு முன் குடும்பத்துடன் தீபம் ஏற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே