நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு..!!

பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட ரூ.2,500 வழங்கபடுகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் பேசி வருகிறார்.

நாமக்கல் மாவட்டம் ராசியான மாவட்டம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஏழை, எளிய மக்களை காக்கும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பரப்புரையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார்.

இன்னும் சில மாதங்களில் வரவிற்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

செவ்வாய், புதன்கிழமைகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் பழனிசாமி, அங்கு பல்வேறு மக்களையும், தொழிலதிபா்களையும், விவசாயிகளையும் சந்தித்துப் பேசுகிறாா்.

இன்று காலை ராசிபுரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் பழனிசாமி கூறியதாவது; நாமக்கல் மாவட்டம் மிக ராசியான மாவட்டம். நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு தொகுதிகளில் அதிமுக பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டம் அதிமுகவின் எஃகு கோட்டை. தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.  

ஏழை, எளிய மக்களை காக்கும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

தமிழர்கள் பண்டிகையான பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியோடுக் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே ரூ.2,500 பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பரமத்திவேலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் மட்டும் முதல்வரின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முதல்வருடன் ஒன்றாகப் பணியாற்றிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ மணி என்பவா் காலமாகி விட்டதால், அங்கு மட்டும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே