Breaking News : வருமான வரித்துறை அலுவலகத்தில் கல்கி சாமியார் மகன் கிருஷ்ணா, மருமகள் பிரீத்தி ஆஜர்

கல்கி சாமியாரின் மகன் மற்றும் மருமகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி இருக்கிறார்கள்.

கல்கி சாமியார் மற்றும் அவரது மகன் சம்பந்தப்பட்ட இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது சம்பந்தமாக அவர்கள் ஆஜராக வேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தார்கள்.

சம்மனை ஏற்றுக் கொண்ட இருவரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி, தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக வருமானவரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நேற்று இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும், உடல்நலம் குன்றி இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த சூழ்நிலையில் வருமான வரித் துறை சம்மனுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பார்களோ என்ற ஐயம் ஏற்பட்டது.

ஆனால் தற்பொழுது வருமானவரித்துறை சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராகி இருப்பதை பார்க்க முடிகிறது.

5 நாட்கள் நடைபெற்ற சோதனையில் 800 கோடிக்கும் அதிகமாக வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

கணக்கில் வராத 44 கோடி ரூபாய் ரொக்கம், 88 கிலோ தங்க நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யபட்டிருக்கின்றன.

அதேபோல வெளிநாட்டு மொத்தம் 20 கோடி ரூபாய்க்கு சிக்கிருக்கிறது. மேலும் 4000 ஏக்கர் நிலம் வாங்கியது வெளி நாட்டில் சட்டவிரோதமாக ஹவாலா மூலமாக 100 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்வது ஆகியவை வருமான வரித்துறை விசாரணைகள் தற்போது அம்பலமாகி இருக்கிறது.

இவை குறித்தெல்லாம் தற்போது கல்கி பகவானுடைய மகன் கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி பிரீத்தி இருவரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து வருவதாக வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த விசாரணை இன்று மாலை வரை நீடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவே பார்க்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு சோதனையை நடத்தி முடித்த உடன் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்புவர்கள். அதனை ஏற்று அவர்கள் நேரில் ஆஜராகுவார்கள்.

வருமான வரித்துறை சோதனையின்போது பறிமுதலான ஆவணங்கள், அது சம்பந்தமான கேள்விகளை அவர்களிடம் முன் வைப்பார்கள்.

அந்த வழிமுறை அடிப்படையில் தான், தற்பொழுது கிருஷ்ணா மற்றும் ப்ரீத்தி ஆகியோரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக வருமானவரித் துறை தரப்பில் சொல்லப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே