வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக ராமநாதபுரத்தில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அதேபோல திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டிருக்கிறது.
தற்போது அதனுடன் சேர்த்து தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தொடர் மழையின் காரணமாக தற்போது பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்ட அந்த அண்மை செய்திகள் கிடைத்திருக்கின்றன.
இன்னும் தமிழகத்தின் பல இடங்களில் இன்றைய தினம் மிதமான மழையும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
அதிலும் குறிப்பாக தற்போது சென்னையை பொறுத்தவரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்த சூழ்நிலையில் தற்போது ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், கொடைக்கானல் வட்டத்திலும் பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.