சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தங்க தேரில் சுவாமி வீதி உலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சுவாமி ஜெயேந்திரநாதர் வள்ளி தெய்வானையுடன் தங்க தேரில் வீதி உலா வந்தார்.

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 28ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த விழாவின் இரண்டாம் நாளான நேற்று சுவாமி ஜெயேந்திரர் வள்ளி-தெய்வானையுடன் கந்த சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார்.

சிறப்பு பூஜைகளை தொடர்ந்து சுவாமிகள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தன.

இதில் ஏராளமான பெண்கள் மடிப்பிச்சை ஏந்தி பின்னோக்கி சென்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரகோஷத்துடன் வழிபாடு நடத்தினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே