BREAKING NEWS : தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை

தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதித்தது பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம்.

முஷாரஃப் பாகிஸ்தான் அதிபராக பொறுப்பு வகித்த போது அந்த நாட்டில் கடந்த 2007-ம் ஆண்டு அவசர நிலை பிரகடனம் செய்தார்.

அதன் ஒருபகுதியாக நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை அவர் முடக்கினார்.

இதன் மூலம் அவர் தேசத் துரோகத்தில் ஈடுபட்டதாக கடந்த 2013-ம் ஆண்டில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் தலைமையிலான அப்போதைய அரசு வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில் முன்னாள் அதிபர் முஷாரஃப்க்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு முதல் இவர் துபாயில் வசித்து வருகிறார்.

அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற அரசியல் கட்சியையும் அவர் நடத்தி வந்தார்.

ஆனால் இவரது உடல்நிலை மோசமடைந்ததால் அந்த கட்சியின் செயல்பாடுகள் முடங்கின.

இவர் பாகிஸ்தானின் அதிபராக கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2008-ம் வரை இருந்தார்.

பர்வேஸ் முஷாரஃப் தற்போது உடல்நலக் குறைவால் துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே