#BREAKING : நேபாளில் அனைத்து இந்திய செய்தி சேனல்களுக்கு தடை விதிப்பு!

இந்திய செய்தி தொலைக்காட்சிகளுக்கு நேபாள அரசு திடீரென தடை விதித்துள்ளது. டிடி செய்தி சேனலை தவிர அனைத்து செய்தி தொலைக்காட்சிகளையும் ஒளிபரப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்ணமைக் காலமாக நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் உறவு அவ்வளவு சிறப்பாக இல்லை.

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மூன்று பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி திடீரென வரைபடம் வெளியிட்டது.

வரைபடத்திற்கு நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

அப்போது முதல் நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

நேபாள பிரதமர் ஒலி, கொரோனா வைரஸைவிட, இந்திய வைரஸ் மோசமானது என்று விமர்சித்தார். 

இந்தியாவிற்கு எதிராக நேபாள அரசு தொடர்ந்து பல்வேறு கருத்துக்ளை வெளியிட்டு வந்தது.

இதற்கு இந்திய தரப்பிலும் கடும் பதிலடி கொடுக்கப்பட்டது. சீனா உடனான நட்பால் இந்தியாவை நேபாளம் சீண்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் நேபாள அரசு இந்தியாவின் அனைத்து செய்தி தொலைக்காட்சிகளையும் ஒளிபரப்ப திடீரென தடை விதித்துள்ளது.

நேபாளத்திற்கு எதிரான தேசவிரோத செய்திகளை ஒளிபரப்புவதாக கூறி, டிடி செய்தி தொலைக்காட்சியை தவிர அனைத்த இந்திய தொலைக்காட்சிகளுக்கும் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே