மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு..?

கொல்கத்தாவில் உள்ள கட்டடம் ஒன்றில் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் பெலகட்டா பகுதியில் காந்திமட் பிரெண்ட்ஸ் சர்க்கிள் கிளப் உள்ளது.

இந்த கட்டடத்தின் மேல் தளத்தில் திடீரென மர்ம பொருள் வெடித்தது.

இதனால் அந்த கட்டடத்திற்கு சேதம் ஏற்பட்டது. இதில் யாரும் காயமடைந்ததாகவோ, உயிரிழந்ததாகவோ தகவல் இல்லை.

இந்த வெடிப்பிற்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே