பல ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த அயோத்தி ராமர் கோயில் வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வெளிவந்த நிலையில் தற்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த கோவிலை கட்டுவதற்கு நாடு முழுவதிலும் இருந்து நன்கொடைகள் வசூலிக்கப்பட்டு வருகின்றன என்பதும் பலர் லட்சக்கணக்கில் நன்கொடை கொடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ரூபாய் ஐந்து லட்சத்து 100 ரூபாய் நன்கொடையாக கொடுத்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியா நகரில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு இந்த நன்கொடையை அவர் தனிப்பட்ட முறையில் கொடுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே