திருவாரூரில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை- முதல்வர்

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த மன்னார்குடியை சேர்ந்த ராணுவ வீரர் திருமூர்த்தி குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே புள்ளவராயன் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி. 47 வயதான இவர் 31 ஆண்டுகளாக எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார்.

ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த போது கடந்த 26 ந்தேதி இரவு துப்பாக்கி குண்டு பாய்ந்து சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இவருக்கு மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உள்ளனர் .இராணுவ வீரர் உடலை காலம் தாழ்த்தாமல் விரைவில் சொந்த ஊர் அனுப்பி வைக்க வேண்டும் என ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்நிலையில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு இரங்கல் தெரித்த முதல்வர் பழனிசாமி அவரது குடும்பத்தில் ஒரு நபருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே