#BREAKING : தமிழகத்தில் இன்று (ஜூலை 13) 4,328 பேர் கொரோனாவால் பாதிப்பு; 66 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியே 30லட்சத்து 65 ஆயிரத்து 164 ஆக அதிகரித்துள்ளது.

5 லட்சத்து 72 ஆயிரத்து 272 பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்தில் நேற்று வரை சுமார் ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட4,328 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 44,560 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,54,008 ஆக அதிகரித்துள்ளது.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 2,576 பேர் ஆண்கள், 1,752 பேர் பெண்கள். 105பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.

இன்று மட்டும் 66பேர் உயிரிழந்தனர். 16பேர் தனியார் மருத்துவமனையிலும், 50 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,032 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 3,035 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 92,567 ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே