உலகின் சக்தி வாய்ந்த பெண்களில் நிர்மலா சீதாராமன்..

உலகின் சக்திவாய்ந்த 100 பெண்மணிகளின் பட்டியலில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை விட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலை பெற்றுள்ளார்.

உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்மணிகளின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டுள்ளது.

அந்த பட்டியலில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் 40 ஆவது இடத்தையும்; அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகளும், ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் 42 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முப்பத்தி நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் இந்திய பெண்மணிகளான HCL நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், பிரபல தொழிலதிபரின் மகனுமான ரோஷினி நாடார் மல்கோத்ரா 54 வது இடத்தையும்; பயோகான் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கிரண் மஜூம்தார் 65 ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.

போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் முதலிடம் பிடித்துள்ளார்.

ஐரோப்பிய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லாகார்ட் இரண்டாமிடத்தையும், அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் சபாநாயகர் நான்ஸி பெளோசி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே