நியூசிலாந்தில் பிறந்தது 2021..!!

நியூசிலாந்தில் பொதுமக்கள் வண்ண விளக்குகள், வாணவேடிக்கைகள், கலைநிகழ்ச்சிகளுடன் புத்தாண்டை வரவேற்றனர்.

சமோவா மற்றும் கிறிஸ்துமஸ் தீவைத் தொடர்ந்து, உலகில் புத்தாண்டை வரவேற்கும் இரண்டாவது நாடு நியூசிலாந்து.

ஆண்டுதோறும் நியூசிலாந்தில் முதலில் புத்தாண்டு பிறக்கும். 

அதன்படி, நியூசிலாந்தில் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்தது.

நியூசிலாந்து ஆக்லாந்து நகரில் கூடியிருந்த பொதுமக்கள் 2021 ஆம் ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

2021 ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் அங்கு வானவேடிக்கைகள் நிகழ்ந்தன.

அதனை பார்த்த அங்கு குழுமியிருந்த மக்கள் ஆச்சரியத்தோடும், ஆர்ப்பரிப்புடனும் கண்டு களித்தனர். நியூசிலாந்தில் கொரொனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என்பதால் மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டை கொண்டாடினர்.

இதற்கான முன்னேற்பாடுகளுடன் காத்திருந்த நியூசிலாந்து மக்கள், புத்தாண்டு பிறந்தவுடன், அதை ஒளிவெள்ளத்தால் வரவேற்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே