துருக்கிய உலுக்கிய நிலநடுக்கத்திற்கு 18 பேர் உயிரிழப்பு!

துருக்கியில் தலைநகர் அங்காராவில் இருந்து கிழக்கே சுமார் 750 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஏலாசிக் நகரில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

இதில் 14 பேர் உயிரிழந்தனர். 300க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.

மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 8 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல்வேறு நில அதிர்வுகள் நீடித்து வருவதாக அந்நாட்டு அவசரகால மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அவசர கால உதவிக்கு ராணுவத்தினர் தயார் நிலைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே