அமித்ஷாவின் வருகைக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி..!!

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை தலைமை செயலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ” எல்.முருகன் கூறிய தகவலின் படி, அமித் ஷா தமிழகத்திற்கு வேல் யாத்திரைக்கு வருகை தரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அவர் திடீரென வேல் யாத்திரைக்கு செல்லவும் வாய்ப்புகள் உள்ளது. சூரப்பா எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசி வருகிறார்.

அரசு அதிகாரியின் மீது புகார் வந்தால், அந்த புகாரில் முகாந்திரம் உள்ளதா? என்பதை விசாரணை செய்த பின்னரே விசாரணைக்குழு அறிவிக்கப்படும்.

தற்போது ஓய்வுபெற்ற கலையரசன் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

அவர்கள் விசாரணைக்கு பின்னர் சமர்ப்பிக்கும் அறிக்கையை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும். 

பாஜகவினர் பொதுவாக தமிழகத்திற்கு வருகையில் கூட்டணி குறித்து பேசுவதில்லை. தற்போது தேர்தல் காலம் என்பதால், கூட்டணி குறித்து பேசலாம் என வெளியே தகவல் பரவி வருகிறது ” என்று தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே