டனுக்கு ரெட்டுக்கு ரெட்டுக்கு டும் டும் , டனுக்கு ரெட்டுக்கு ரெட்டுக்கு டும் டும் , டனுக்கு ரெட்டுக்கு டனுக்கு ரிட்டக்கு ரிட்டக்கு ரிட்டக்கு டங்கி டங்கி டங்கி டும் என்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பாடலை படித்த உங்களுக்கு என்ன புரிந்தது என்று கேட்டால், யாராலும் சொல்ல முடியாது. ஆனால் மழலை குரலில் இந்த பாடல் கேட்பதற்கு வித்தியாசமாக உள்ளது.

ஒரு கார்டூன் கதாபாத்திரம் தன் காலால் பனிப் படலத்தைக் கிளறியவாறு நடந்துகொண்டே பாடுவது போன்று வீடியோவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது டிவிட்டர், பேஸ்புக்கில் வைலானதை விட வாட்ஸ்ஆப் ஸ்டேடசில் அதிக இடத்தைப் பிடித்துள்ளது. 

திருநெல்வேலியின் துணை போலீஸ் கமிஷனர் அர்ஜுன் சரவணனும் இந்த வீடியோவை பகிர்ந்து “மகளதிகாரம்… மறுப்பு சொல்ல வழியே இல்லை. இதை எல்லோரும் பார்த்தாக வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்குக் கீழ் பலரும், இந்த கார்டூனை மாற்றி வடிவமைத்த வீடியோவை பதிவிட்டுள்ளனர். மற்றும் சிலர் இந்த பாடலை பலமுறை கேட்டுவிட்டேன், ஆனாலும், மனதை மகிழ்ச்சிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதேபோல், பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து அவரவர் குழந்தைகள் இதுபோன்று பாடுவார்கள் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே