பிக்பாஸ் கவினின் படத்தில் நடிக்கும் பிகில் காயத்ரி ரெட்டி.

கவின் நடிக்கும் லிப்ட் படத்தில் ஒரு முக்கிய ரோலில் பிகில் புகழ் காயத்ரி ரெட்டி நடித்துள்ளார்.
விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்திருந்த பிகில் படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டியது. அந்த படத்தில் வரும் பெண்கள் கால்பந்து அணியில் இருக்கும் வீராங்கனைகளாக நடித்திருந்த பலருக்கும் பெரிய புகழ் கிடைத்தது. அந்த கால்பந்து அணிக்கு கேப்டனாக நடித்து இருந்த அமிர்தா ஐயர் அடுத்து ஹீரோயினாக பிக்பாஸ் புகழ்.
கவின் நடிக்கும் லிப்ட் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்து பெரிய எதிர்பார்ப்பு இதற்கு உள்ளது. இந்நிலையில் பிகில் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்த காயத்ரி ரெட்டியும் தற்போது லிப்ட் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது. இந்த தகவலை அவரே இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடிய காயத்ரி ரெட்டியிடம், உங்களின் அடுத்த படம் என்ன? என கேட்டதற்கு, லிப்ட் படத்தின் புகைப்படத்தை அவர் பதிலாக கொடுத்துள்ளார்.
படத்தில் உங்கள் கதாபாத்திரம் என்ன என கேட்டதற்கு அது ரகசியம் என பதில் கூறியுள்ளார் அவர்.
மேலும் அவர் இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி சில வரிகள் பேசி உள்ளார். இயக்குனர் வினித் வரபிரசாத் உடன் பணியாற்றியது சிறப்பாக இருந்தது எனக் கூறியுள்ள அவர், ஹீரோவாக நடித்துள்ள கவினுக்கு பெரிய இதயம் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் போது கிரண் உடன் அதிகம் நட்பாகப் பழகியதாகவும் தெரிவித்துள்ளார்.
கிரண் கனா காணும் காலங்கள் டிவி ஷோ மூலமாக பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் லிப்ட் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். ஈகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு மைக்கேல் பிரிட்டோ இசையமைத்துள்ளார்.

பிக் பாஸ் 3 சீசன் மூலமாக மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த கவின், அதற்குப் பிறகு ஹீரோவாக நடக்கும் முதல் படம் இது என்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும் போது இதில் கவின் மற்றும் ஹீரோயின் அமிர்தா ஐயர் லிப்ட் உள்ளே சிக்கிக் கொள்ளும் போது நடக்கும் சம்பவங்கள் தான் கதையாக இருக்கும் என கருதப்படுகிறது.

சின்னத்திரையில் மட்டும் நடத்து வந்த கவின் 2012ல் விஜய் சேதுபதியின் பீட்சா படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அந்த படத்தில் அவருக்கு மிகச் சிறிய கதாபாத்திரம் தான். அந்த படத்தில் அவர் நடித்தார் என்று கூட பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு சிறிய ரோல். அப்படி இருந்தவர் தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்திருப்பதை அவரது ரசிகர்கள் பாராட்டுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அந்த படத்திற்கு பிறகு இன்று நேற்று நாளை படத்தில் ஒரு சில நொடிகள் மட்டுமே வரும் ரோலில் நடித்திருந்தார் கவின்.
அதற்குப் பிறகு நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார் அவர். ஆனால் அந்த படத்திலும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார் அவர். அந்த நிகழ்ச்சியிலும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இருப்பினும் அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் ஆதரவு இருந்தது. கடைசி வாரத்தில் அவர் தான் வெளியேறுவதாக திடீரென அறிவித்து விட்டார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு லிப்ட் படத்தில் தான் அவர் ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது முடிந்துவிட்டது, post-production பணிகளும் நடந்து வருகிறது. தியேட்டர்கள் தற்போது மூடப்பட்டு உள்ளதால் அவை திறக்கப்பட்ட பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகும் வாய்ப்பு உள்ளது என தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே