நடிகர் விஷால், பாஜகவில் இணையவுள்ளார் என்று வெளியான தகவலுக்கு விஷால் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் விஷால் குறித்து அவ்வப்போது சில கருத்துகள் வெளியாகி சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறும்.

அந்தவகையில் தற்போது, நடிகர் விஷால் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், அதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் எல்.முருகனை சந்தித்து பேச இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

அதனை அடுத்து, பலர் இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் கருத்து தெரிவிக்கத்தொடங்கினர்.

இந்த நிலையில், இந்த செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ளனர் நடிகர் விஷால் தரப்பினர். 

அதாவது, விஷால் பாஜகவில் இணையவுள்ளதாக சமூகவலைதளங்களில் வெளியான தகவலில் உண்மையில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா மறைவை அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டி இடுவதற்காக வேட்புமனு அளித்து பின்னர் அது நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். அவருக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே