நடிகர் விஜய்யின் 66வது படத்தை இயக்குனர் வம்சி இயக்க உள்ளதாக படக்குழு அறிவிப்பு..!!

தளபதி 66 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியகியுள்ளது. விஜய் தற்போது நெல்சன் திலீப் குமாரின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விஜய்யின் ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

தற்போது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. அங்கு ஷாப்பிங் மாலில் ஹாயாக விஜய் நடந்து செல்லும் புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. இதையடுத்து படம் பொங்கலுக்கு வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தைத் தொடந்து விஜய்யின் அடுத்தப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதில் குறிப்பாக தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி தளபதி 66 படத்தை இயக்குவதாக ஏறக்குறைய உறுதியான தகவல் வலம் வந்தன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது தளபதி 66 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார், இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். இதன் மூலம் தனது 29 ஆண்டு கால திரைப்பயணத்தில் முதன் முறையாக பிறமொழி படமொன்றில் ஹீரோவாக நடிக்கிறார் விஜய்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே