டெல்லியில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது!

டெல்லியில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவில் கொரோன வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோன்றி உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,000ஐ கடந்துள்ளது. இதற்கு பலி எண்ணிக்கை 3,300 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் நேற்று வரை 30 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று டெல்லியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சிறப்பு சுகாதார செயலாளர் சஞ்சீவ குமார் கூறுகையில், டெல்லியின் உத்தம் நகரைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இவர் சமீபத்தில் மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு பயணமாகியிருந்ததாகவும் கூறினார்.

இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் குறித்த தகவல்கள்:

ராஜஸ்தான் – 17 (இத்தாலியர்கள் – 16 | ஓட்டுநர் – 1)
உத்தரபிரதேசம் – 7 (ஆக்ரா – 6 | காசியாபாத் – 1)
கேரளா – 3
டெல்லி – 2
தெலங்கானா – 1
ஹரியானா – 1 (இத்தாலியிலிருந்து திரும்பிய PayTm ஊழியர்)

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே