கரூரில் நடைபெற்ற 37வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி மாணவ மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

கரூரில் நடைபெற்ற 37வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி மாணவ மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழகத்தின் 31-வது சாலை பாதுகாப்பு வார விழா நேற்று துவங்கி வரும் 27ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது .

கரூரில், தனியார் பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி கரூர் கோவை சாலையில் உள்ள தனியார் திருமண அரங்கில் இருந்து இன்று துவங்கியது .இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவியர் சாலை பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு வையாபுரி நகர், கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா, உள்ளிட்ட பகுதிகள் வழியாக திருவள்ளுவர் மைதானத்தை வந்தடைந்தனர்.

பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவியருக்கு பிஸ்கட் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) ஆனந்த், போக்குவரத்து ஆய்வாளர் தனசேகரன், ரவிச்சந்திரன், மீனாட்சி மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நமது செய்தியாளர் : மு.மணிகண்டன்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே