மின் கட்டணம் விவரம் அறிய ஆன்லைனில் ஏற்பாடு..!

வீட்டு மின் பயனீட்டாளர்கள் தங்களின் மின் கட்டண தொகைக்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்க காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணம் செலுத்த அரசு சார்பில் கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதன்பின்னர் சமீபத்தில் நான்கு மாதத்துக்கான மின் கட்டணம் செலுத்த வலியுறுத்தப்பட்டது. இதில் வழக்கத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

ஆனால், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என தமிழ்நாடு மின்சார வாரியம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனிடையே மின்கட்டணக் குழப்பங்களைத் தீா்க்க வலியுறுத்தி ஜூலை 21-இல் வீடுகளில் கறுப்புக் கொடியேற்றி போராட்டம் நடத்துவது என திமுகவின் மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் வியாழக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் வீட்டு மின் பயனீட்டாளர்கள் தங்களின் மின் கட்டண தொகைக்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட அறிக்கையில், வீட்டு மின் பயனீட்டாளர்கள் தங்களின் மின் கட்டண தொகைக்கான விபரங்களை அறிந்துகொள்ள மின் கட்டண விபர இணையத்தளத்திலோ ((TANGEDCO – Bill Status)) அல்லது மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தின் (TANGEDCO – Online Payment Portal) மூலமாகவோ தெரிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

முந்தைய மாத மின் கட்டண தொகையையே (PMC) கணக்கீடு செய்யப்பட்டுள்ள நுகர்வோர்கள் பின்னர் அடுத்த கணக்கீட்டில் கணக்கிடப்பட்ட மொத்த தொகை எவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள, கிழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தின் வாயிலாக, கணக்கிடப்பட்ட மொத்த தொகையை கிளிக் செய்து முழு விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே