கொரோனோ பாதிப்பு இருக்கும் வரை அனைத்து ரேசன் கார்டுகளுக்கும், மாதம் ரூ.15,000 வழங்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனோ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசு பல்வேறு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனோ பாதிப்பை குறைக்க மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் வருகின்ற 22 ம் தேதி மக்கள் ஊரடங்கையும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதே போல் அலுவலகங்களிலும் வீடுகளிலேயே இருந்து வேலை செய்ய மாநில அரசு அறிவித்துள்ளது.
இதனால் மக்கள் வெளியே செல்லாமல் வீடுகளிலேயே இருப்பதால் ஒவ்வொரு குடும்பங்களுக்கு வருமான இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் கொரானோ பாதிப்பில் இருந்து மாநிலத்தை முழுமையாக மீட்டெடுக்கும் நோக்குடன் ரூ20,000 கோடி சிறப்பு நிதி திட்டத்தை அறிவித்துள்ளது.
- அதே போல், கொரோனோ பாதிப்பு இருக்கும் வரை தமிழக அரசும் அனைத்து ரேஷன் காரர்களுக்கும் மாதம் ரூ15,000 வழங்க வேண்டும் என்றும்,
- கொரோனோ வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள தேவையான கிருமி நாசினி மற்றும் சோப் ஆகியவற்றை நேரடியாக வீடுகளுக்கு கொண்டு வந்து டோர் டெலிவரி செய்ய உத்தரவிட கோரியும் சென்னை சேத்துப்பட்டு சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் உமாபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.