நாகூர் தர்கா கந்தூரி விழாவில் கலந்துகொண்ட ஏ.ஆர். ரஹ்மான்..!

உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழாவில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொண்டார். 

உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தன கூடு ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது.

நாகூர் தர்காவின் கந்தூரி விழா கடந்த மாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதில் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் நாகை சர் அகமது தெரு கூட்டடியில் இருந்து தொடங்கி பல்வேறு பகுதிகள் வழியாக நடத்தப்பட்டது.

இதில் சாம்பிராணிசட்டி ரதம், நகரா மேடை மூலம் சந்தன கூட்டின் முன்னும், பின்னுமாக அணிவகுத்து ஊர்வலம் நடைபெற்றது.

பின்னர் சந்தனக்குடம் தர்காவுக்குள் எடுத்து செல்லப்பட்டு, பாரம்பரிய முறைப்படி சடங்குகளுடன் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சந்தனம் பூசிய தர்காவின் கலிபாவை ஏராளமான இஸ்லாமியர்கள் தொட்டு வணங்கினர். இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே