காஜல் அகர்வாலின் மெழுகு சிலை திறப்பு!

சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் பிரபலமாக உள்ளவர்களின் மெழுகு பல்வேறு பகுதிகளில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பிரபல நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலை சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதனை காஜல் அகர்வால் தமது குடும்பத்துடன் சென்று தொடங்கி வைத்து, மெழுகு சிலையை பார்வையிட்டார். அப்போது சிலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார்.

காஜல் அகர்வாலின் இந்த மெழுகு சிலை, மறைந்த நடிகை ஸ்ரீதேவி, அனுஷ்கா ஷர்மா, ப்ரபாஸ், மகேஷ் பாபு, கரண் ஜோஹர் ஆகியோரின் மெழுகு சிலைக்கு அருகே வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே