தெலுங்கான ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டு விழா

தமிழகத்தை மறக்க மாட்டேன் என்றும் தமிழகத்தின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும் தெலுங்கான ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை லட்சுமிபுரத்தில் உள்ள பத்மஸ்ரீ சேஷ மகாலில் தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் கஸ்தூரிராஜா, நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய கஸ்தூரிராஜா, தமிழகத்தின் அமைதியான புயல் புலம்பெயர்ந்து தெலுங்கானா சென்றுவிட்டதாகவும், தமிழிசை சௌந்தர்ராஜன் வீர தமிழச்சி என்றும் புகழாரம் சூட்டினார்.

இதையடுத்து பேசிய வரலட்சுமி சரத்குமார் பல துன்பங்களை கடந்து ஒரு பெண்ணாகவும், ஆளுநராகவும் தமிழிசை சௌந்தர்ராஜன் வெற்றி பெற்று இருக்கிறார் என்றும், மற்றவர்களுடைய விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது என்பதற்கு தமிழிசை சவுந்தரராஜனே எடுத்துக்காட்டு எனவும் கூறினார்.

இதைத் தொடர்ந்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், தனக்கும் வரலட்சுமி சரத்குமாருக்கும் ஒரே எண்ணம் இருப்பதால் தான் ஒரே மேடையில் அமர்ந்து இருப்பதாக கூறினார்.

மேலும் தெலுங்கானா செல்லும்போது, தான் தமிழச்சி என்பதை உணர்வதாக கூறினார்.

இதனிடையே சென்னை மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் பிரம்மோற்சவ விழாவில் தமிழிசை சௌந்தர்ராஜன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

மேளதாளம் முழங்க அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து சாமி தரிசனம் செய்த தமிழிசை சௌந்தரராஜனுக்கு பரிவட்டம் கட்டி கோவில் நிர்வாகம் கவுரவித்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே