தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
இந்த மாவட்டங்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் என்ற காவல்துறை எஸ்.பி.க்கள் இன்று நியமிக்கப்பட்டனர்.
இதனை அடுத்து 5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பின்னர், அதற்கு சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளே தற்போது ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஆட்சியராக கிரன் குர்ராலா,
- தென்காசிக்கு அருண் சுந்தர் தயாளன்,
- செங்கல்பட்டுக்கு ஜான் லூயிஸ்,
- திருப்பத்தூருக்கு சிவனருள்,
- ராணிபேட்டைக்கு திவ்யதர்ஷினி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.