திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அவசரப் பயணங்களுக்கு விண்ணப்பிக்கும் பொருட்டு சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.
அவசர தேவைக்காக பயணிப்பவர்கள் இமெயில் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கூறியிருந்த நிலையில் பலரும் விண்ணப்பித்து இதுவரை பதிலேதும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஏராளமான மக்கள் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கும் பொருட்டு வந்திருந்தனர்.
அனைவரும் சமூக விலகலை பின்பற்றி ஆணையாளர் அலுவலகத்தில் காத்திருந்தனர்.
இதுவரை 8300 பேர் அவசர பயணத்திற்காக விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 111 பேருக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.