கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் எங்கு பார்த்தாலும் சமுத்திரகனியை கேலி செய்த மீம்கள் வைரலாகி வருகிறது.
மீம் க்ரியேட்டர்களுக்கு பிடித்தமானவர் யார் என்றால் அது நம்ம வடிவேலு தான். அவருடைய பேஸ் எந்த மீமுக்கும் செட்டாகி விடும்.
ஆனால், கடந்த சில நாட்களாக சமுத்திரகனியின் பெயரை கிண்டல் செய்தும் அவர் படங்களில் பேசிய வசனங்களை கிண்டல் செய்தும் பல வகையான மீம்கள் வந்து கொண்டிருக்கின்றன.
தொடர்ச்சியாக வந்த சமுத்திரகனி மீம்களால் சமூக வலைத்தளங்களே சமுத்திரகனியை பற்றியே பேச துவங்கி உள்ளனர்.
திடீரென மீம் கிரியேட்டர்கள் மொத்தமாக சமுத்திரகனியை கிண்டல் செய்ய என்ன காரணம் என்று ஆராய்ந்த போது எதேர்ச்சையாக சில மீம் கிரியேட்டரகள் சமூக வலைத்தளங்களில் எப்போதும் போல் அவரை கிண்டல் செய்து வந்தனர்.
இந்த நேரத்தில் இருந்த கொரோனா தொற்றுக்கு சில அரவேக்காடுகள் சமுத்திரகனியின் பட வசனங்களை வைத்து தொற்றுக்கு காமெடியாக ஆறுதல் கூற, இதன்பின் சமுத்திரகனியை மீம் கிரியேட்டர்கள் மீம்களின் வாயிலாக அதிக படியாக கிண்டல் செய்ய துவங்கி விட்டனர்.
இவர்கள் ஆரம்பத்தில் கொடுத்த மீம்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர, அடுத்தடுத்து அனைத்து மீம்கிரியேட்டர்களும் கோதாவில் குதித்தனர்.
இப்படியான விஷயம் அடிக்கடி அல்ல தினம் தோறும் சமூக வலைத்தளங்களில் நடப்பது மிக சாதாரணமான விஷயமாகும் .
இதை மீம் கிரியேட்டர்கள் டிரெண்டிங் மீம்கள் என்று சொல்வார்கள்.
ஒரு வகையான நல்ல மீம்களை பின்பற்றி அதே போல ஒரு மீமை செய்வது ஆகும் இப்படியான விஷயங்களை இணைய ரசிகர்கள் ரசித்து பகிர்வதும் உண்டு .
இந்த நேரத்தில் மீம்களுக்கு மௌவுசு கூட இது மட்டும் காரணம் அல்ல, கொரோனா தொற்று பரவ கூடாது என்பதனால் ஊரடங்கு உத்தரவை 21 நாட்களுக்கு பிறப்பித்துள்ளது அரசு.
இந்த நேரத்தில் இணையத்தில் மூழ்கிய அனைத்து ரசிகர்களுக்கும் இதுதான் விருந்து.
சமுத்திரகனி படங்களில் அவர் அதிகபடியாக அறிவுரை கூறுவார்.
ஆனால் இப்போது டிரெண்டிங்கில் சமுத்திரகனியின் இந்த இயல்பு பெரிய அளவில் கிண்டல் செய்யபட்டுள்ளது.
இந்த நேரத்தில் சமுத்திரகனியின் ரசிகர்கள் சிலர் இதை கண்டு கோபமும் கொண்டுள்ளனர்.
இந்த வகையான விஷயங்கள் சமுத்திரகனிக்கு மட்டுமல்ல சில மாதங்களுக்கு முன் எம்.ஜி.ஆருக்குமே நடந்தது.
இதனால் இதை யாரும் மனதில் எடுத்து கொள்ளாமல் சிரித்து மகிழ்ந்து கடந்து செல்லுங்கள் என்பது பலரின் கருத்து.