சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக அம்ரேஷ்வர் பிரதாப் சஹி நியமிக்கப்பட்டுள்ளார்.

பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த அம்ரேஷ்வர் பிரதாப் சஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

நவம்பர் 13ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாகவே பதவியேற்க அம்ரேஷ்வர் பிரதாப் சஹிக்கு குடியரசுத் தலைவர் அறிவுறுத்தியிருக்கிறார்.

அம்ரேஷ்வர் பிரதாப் சஹி 1959 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி பிறந்தவர். 1985 ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தனது பணியைத் தொடங்கினார்.

சிவில் மற்றும் அரசியல் சாசன வழக்குகளில் ஆஜராகி வந்த அம்ரேஷ்வர் பிரதாப் சஹி 2004 ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

2005 ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர் 2018 ஆம் ஆண்டு பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே