நீட் தேர்வு அச்சத்தால் இன்று அதிகாலை ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது மேலும் ஒருவர் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வானது பல எதிர்ப்புகளுக்கிடையே நாளை மதியம் 2 மணிக்கு நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.

இதனிடையே, இத்தேர்வுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தயாராகி வந்த மதுரையை சேர்ந்த ஜோதி ஸ்ரீதுர்கா எனும் மாணவி இன்று தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டார்.

தமிழகம் முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த தற்கொலை சம்பவத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தின் சோகமே மக்கள் மனதில் இன்னும் நீங்காத நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியை சேர்ந்த மணிவண்ணன் மற்றும் சித்ரா எனும் தம்பதியினரின் மகன் ஆதித்யா.

20 வயதான இவர், நாளை நடைபெறவுள்ள நீட் தேர்வுக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் நீட் தேர்வின் அச்சம் காரணமாக இன்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெறவிருக்கும் நேரத்தில், இந்த வாரத்தில் மட்டும் தமிழகத்தில் நீட் அச்சத்தால் நடைபெறும் 3வது தற்கொலை இதுவாகும்.

ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி, மற்றும் கடந்த வாரம் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் விக்னேஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே