பொறியியல் இறுதியாண்டு தேர்வில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அரியர் மாணவர்களுக்கான தேர்வுகள் வரும் 22-ம் தேதி முதல் ஆன்லைனில் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி தேர்வு நடைபெறும்.

கடந்த 2008 முதல் இறுதியாண்டில் அரியர் வைத்துள்ளவர்களுக்கும் ஆன்லைன் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 22ல் செய்முறை தேர்வும் 24ல்-ஆம் தேதி எழுத்துத் தேர்வும் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதம் செமஸ்டரில் இறுதி தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்கு அதே நாளில் தேர்வு நடைபெறும். 

தமிழ்நாடு முழுவதும் இறுதிப் பருவத் தேர்வுகளில் அரியர் வைத்திருந்த மாணவர்களுக்கு மட்டும், அரியர் தேர்வை உடனே நடத்துமாறு பல்கலைக்கழகங்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது .

Terminal Semester தவிர, பிற செமஸ்டரில் அரியர் வைத்திருந்து அதற்கு கட்டணம் செலுத்தியிருப்பின், அவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அரசின் முடிவில் மாற்றம் இல்லை என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே