கன்னியாகுமரி கொரோனா வார்டில் மேலும் ஒருவர் மரணம்…!

கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இயங்கிவரும் கொரோனா சிறப்பு வார்டில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்று காலை உதயகுமார் என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு தனி வார்டு அமைக்கப்பட்டு அங்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பவர்கள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த வார்டில் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்த, எஸ்தர் ராணி 59, ஜான் 49 மற்றும் ஜெகன் 49 ஆகியோர் அடுத்தடுத்து உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர்.

இதனால் கடும் பீதியாகியது. ஆனால் உயிரிழந்த இவர்கள் அனைவரது ரத்த பரிசோதனை அறிக்கையில் கொரோனா இல்லை என்ற முடிவு வந்தது. 

இவ்வாறு இருக்க நேற்று ஒரே நாளில் 2 வயது குழந்தை உள்ளிட்ட 3 வர் அடுத்தடுத்து இதே வார்டில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உயிரிழந்தவர்களில் மரிய ஜான் 66, ராஜேஸ் 24, அருள் பெர்னோ 2 ஆகியோர் வெவ்வேறு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை தகவலில் கூறியது.

இவ்வாறு இருக்க இன்று காலை இதே வார்டில் உதயக்குமார் என்பவர் உயிரிழந்துள்ளார்.

இதனால் ஒரே வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே

%d bloggers like this: