தமிழகத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க அரசு ஏற்பாடு

தமிழகத்தில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பேருந்துகள், ரயில்கள் போன்றவை ரத்து
செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் குடிநீர் சேவை தடையின்றி கிடைக்குமா என்ற சந்தேகம் மக்களிடம் நிலவுகிறது.

இதற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பதிலளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பணியாளர்கள் கூட்டமாக செல்லாமல் சுழற்சி முறையில் பாதுகாப்பு
உபகரணங்களுடன் குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்பாராத காரணங்களால் குடிநீர் வழங்கும் குழாயில் அல்லது மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டால்
உடனடியாக டேங்கர் லாரி மூலம் தடையின்றி குடிநீர் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீரேற்றும் நிலையம், நீர் சேமிப்பு நிலையத்தில் சந்தேகத்திற்குரிய நபர்களை அனுமதிக்க கூடாது என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் குடிநீர் தட்டுப்பாடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே