முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 33 அமைச்சர்கள் பதவியேற்பு..!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

நீர்ப்பாசத்துறை அமைச்சராக துரைமுருகனும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக கே.என்.நேருவும், கூட்டுறவுத்துறை அமைச்சராக ஐ.பெரியசாமியும், உயர்கல்வித்துறை அமைச்சராக க.பொன்முடியும் பதவியேற்றுக் கொண்டனர்.

எ.வ.வேலு பொதுப்பணித்துறை அமைச்சராகவும், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண்மைத்துறை அமைச்சராகவும், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வருவாய்த்துறை அமைச்சராகவும் பதவியேற்றனர்.

தொழில்துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவும், சட்டத்துறை அமைச்சராக ரகுபதியும், வீட்டு வசதித்துறை அமைச்சராக சு.முத்துசாமியும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக கே.ஆர்.பெரியகருப்பனும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

ஊரக தொழில்துறை அமைச்சராக தா.மோ.அன்பரசனும், செய்தித்துறை அமைச்சராக மு.பெ.சாமிநாதனும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக கீதா ஜீவனும், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணனும் பதவி ஏற்றனர்.

போக்குவரத்து துறை அமைச்சராக ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனும், வனத்துறை அமைச்சராக கா.ராமச்சந்திரனும், உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சராக சக்கரபாணியும், மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜியும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக ஆர்.காந்தியும் பதவியேற்றனர்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக மா.சுப்ரமணியனுக்கும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக பி.மூர்த்திக்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக சிவசங்கருக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பி.கே.சேகர்பாபுவுக்கும் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சராக பழனிவேல் தியாகராஜனும், பால்வளத்துறை அமைச்சராக சா.மு.நாசரும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக செஞ்சி மஸ்தானும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் பதவி ஏற்றனர்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சராக சிவ.வீ.மெய்யநாதனும், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக சி.வி.கணேசனும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மனோ தங்கராஜும், சுற்றுலாத்துறை அமைச்சராக மதிவேந்தனும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக கயல்விழி செல்வராஜும் பதவி ஏற்றுக் கொண்டனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே