பெங்களூருவில் இருந்து ஜெயலலிதாவின் காரில் வந்து கொண்டிருந்த சசிகலா தமிழக எல்லையில் வேறு காருக்கு மாறியதை அடுத்து அந்த காரில் அதிமுக கொடி அகற்றப்பட்டது.

சசிகலா வருகையால் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

கொரோனா சிகிச்சை முடிந்து பெங்களூரு தனியார் விடுதியில் தங்கியிருந்த
அவர் தற்போது தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.

இதனிடையே சசிகலா தனது காரில் அதிமுக கொடி பயன்படுத்தியது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார் அளித்தனர்.

சசிகலா தமிழகம் வரும் போது அவர் தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என கோரிக்கை வைத்திருந்தனர். 

இந்நிலையில் தமிழக – கர்நாடக எல்லையான ஓசூர் ஜுஜுவாடி பகுதிக்கு வந்த சசிகலா கார் மாறினார்.

ஜெயலலிதாவின் காரை அவர் பயன்படுத்தி வந்த நிலையில் அதிலிருந்து வேறு காருக்கு மாறி அவர் பயணிக்க தொடங்கினார். அதனால் பழைய காரில் அதிமுக கொடி அகற்றப்பட்டது.

இதனால் சசிகலா, அதிமுக கொடி பொருத்தப்பட்ட வேறு ஒரு காரில் பயணிக்கிறார்.

இந்நிலையில் ஏராளமான தொண்டர்கள் வரவேற்பு அளிப்பதால் காரில் மெல்லமாக சசிகலா வரவேற்பை ஏற்றுக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே