சென்னையில் தொடங்கவிருக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு!

அரசியலில் நுழைவதாக அறிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பின்வாங்கினார்.

நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் முதல் அட்டவணை படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்தது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி அண்ணாத்த படப்பிடிப்பு நடத்தப்பட்ட போதும், குழுவில் நான்கு உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த டிசம்பரில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் மார்ச் 15-ம் தேதி தொடங்கவிருப்பதாகவும், அதற்காக தயாரிப்பு நிறுவனம் உயர்கட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை வகுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக அரசியலில் நுழைவதாக அறிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பின்வாங்கினார். எனவே படத்தின் படப்பிடிப்பில் பாதுகாப்பு நெறிமுறைகள் மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘அண்ணாத்த’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி, ஜார்ஜ் மரியன் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை டி இமான்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே