அண்ணாவின் 51-வது நினைவு தினம் : பொது விருந்தில் கலந்து கொண்ட முதல்வர் பழனிசாமி

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற பொது விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களோடு மக்களாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.

பேரறிஞர் அண்ணாவின் 51வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை கே.கே.நகர் விநாயகர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

மேடையில் வைக்கப்பட்டிருந்த அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர், பொதுமக்களுடன் அமர்ந்து மதிய உணவருந்தினார்.

இதே போல சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார்.

பெண்களுக்கு சேலைகளை வழங்கிய அவர், பொதுவிருந்து நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே