சூடுபிடிக்கும் தேர்தல் களம்: அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தமிழகம் வருகை!

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஒருநாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

புதுச்சேரியிலுள்ள காரைக்காலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும், அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதியம் 3.30 மணியளவில் விழுப்புரம் வருகிறார். பாஜகவின் மாநில மையக்குழு கூட்டம், மாநில செயற்குழு கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்கவுள்ளார். அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கான வியூகம், பரப்புரை திட்டங்கள், பாஜக தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு குறித்து பேசப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் பாஜக பொதுக்குழு கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளார். அதை முடித்துக்கொண்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்ட நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தவுள்ளார். அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்து இரவு 8.30 மணியளவில் தமிழகத்திலிருந்து அமித்ஷா புறப்படுகிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே