பிரிட்டனில் BAFTA விருது விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறந்த படமாக 1917-னும், சிறந்த நடிகராக ஜோக்கர் நாயகன் பீனிக்சும் தேர்வு செய்யப்பட்டனர்.

BAFTA Award

ஆஸ்கர் விருதுக்கு இணையாக கருதப்படுவது பிரிட்டனின் BAFTA விருது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்கர் விழா நடைபெறும் நிலையில், அதன் முன்னோட்டமாக பார்க்கப்படும் இந்த பாஃப்டா விருது வழங்கும் விழா லண்டனில் நடந்தது.

இதில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின.

சிறந்த படத்திற்கான போட்டியில் ஐரிஷ்மேன், ஜோக்கர், once Upon a time in Hollywood ஆகிய படங்களில் ஒன்று விருது வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

SAM MENDES

ஆனால் இரண்டாம் உலகப்போரை மையமாக வைத்து உருவான 1917 திரைப்படம், சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், இத்திரைப்படத்தை இயக்கிய சாம் மெண்டீஸ் சிறந்த இயக்குநருக்கான விருதையும் தட்டிச்சென்றார். VISUAL EFFECTS உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் இப்படம் BAFTA விருதுகளை பெற்றுள்ளது.

ஆங்கிலம் அல்லாத பிறமொழி படப் பிரிவில் தென்கொரியாவின் பாரசை விருது வென்றது.

சிறந்த நடிகருக்கான விருது ஜோக்கர் படத்துக்காக JOAQUIN PHOENIX-ற்கு வழங்கப்பட்டது.

சிறந்த நடிகைக்கான விருதினை, JUDY படத்தில் நடித்த RENEE ZELLWEGER பெற்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே