தொடர் ‘காப்பி கேட்’ சர்ச்சையில் சிக்கும் அனிருத் பாடல்கள்

அனிருத் அவ்வப்போது பாடல்களை காப்பியடித்து சர்ச்சைகளில் சிக்குவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத்தின் பாடல்கள் இணைய தளங்களில் சாதனைகள் படைத்துகொண்டிருக்கும் அதேவேளையில் காப்பி சர்ச்சைகளிலும் அடிக்கடி சிக்கி வருகிறது. அப்படி அனிருத்
காப்பியடித்து மாட்டிகொண்ட பாடல்கள் குறித்த ஒரு தொகுப்பை இங்கே குறிப்பிடுகிறோம்.

இன்றைய தேதியில் தென்னக அளவில் எல்லோராலும் தேடப்படும் இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் அவ்வப்போது பாடல்களை காப்பியடித்து சர்ச்சைகளில் சிக்குவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். இவருடைய இசையில் அண்மையில் வெளியான டாக்டர் படத்தின் ’ஸோ பேபி’ பாடல் ஒரே வாரத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை யூ-டியூபில் பெற்றுள்ளது. ஆனால் இப்பாடல் ஆங்கிலத்தில் வெளியான ஒரு புகழ் பெற்ற ஆல்பத்தின் அப்பட்டமான காப்பி எனவும் தற்போது சர்ச்சை வெடித்து வருகிறது.

ஆங்கில பாப் பாடல்களை காப்பியடித்து சர்ச்சையில் சிக்குவது அனிருத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல. கத்தி படத்தில் விஜய்க்காக அனிருத் உருவாக்கிய அதிரடியான தீம் இசை தான் இது.

ஆனால் இந்த தீம் இசை ஏற்கனவே, ஆங்கிலத்தில் வெளிவந்த ஒரு பாடலின் தழுவல் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இதேபோல் அஜித்தின் வேதாளம் படத்திற்காக அனிருத் உருவாக்கிய தீம் இசையும் ஒரு ஆங்கிலப் பாடலின் இசையை காப்பியடித்து உருவாக்கப்பட்டது தான், என்பதும் தெரியவந்து அனிருத்தின் இமேஜிற்கு களங்கத்தை ஏற்படுத்தியது.

இதன் உச்சமாக காப்பி விவகாரதில் சிக்கி அனிருத்தின் ஒரு பாடலை யூ-டியூப் தளத்தில் இருந்தே நீக்கிய சம்பவமும் அரங்கேறியது. கோலமாவு கோகிலா படத்துக்காக அனிருத் இசையமைத்த ‘எனக்கு கல்யாண வயசுதான்’ பாடல் காப்புரிமை விவகாரதில் சிக்கி பின்னர் நீக்கப்பட்டது, இசையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

விக்ரம் படத்தின் மூலம் முதல்முறையாக கமல் ஹாசனுடன் கூட்டணி அமைத்திருக்கும் அனிருத், பழைய விக்ரம் படத்துக்காக இளையராஜா போட்ட இசையையே கொஞ்சம் மாடர்ன் வடிவில் மாற்றி இசையமைத்திருந்தார். ஆனால் அந்த கொஞ்சம் மாற்றியதையும் காப்பி அடித்த அனிருத், அதே வேகத்தில் மாட்டிக்கொண்டு முழித்தார்.

இந்த வரிசையில் தற்போது டாக்டர் படத்தின் சோ பேபி பாடலும் இணைந்திருப்பது நெட்டிசன்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இப்பாடல் உருவாக்க வீடியோவில் புதுமையான முறையில் கிளாசிக்கல் வெஸ்டர்ன் என்றெல்லாம் பில்டப் கொடுத்தது இதற்குத்தானா எனவும் இணையவாசிகள் கேலி பேசி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே