குவியும் பட வாய்ப்புகள் – வனிதா விஜயகுமார் ஹேப்பி அண்ணாச்சி!

பிரசாந்த் – சிம்ரன் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘அந்தகன்’ படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்புகளால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் பிக் பாஸ் வனிதா.

நடிகர் விஜய் நடித்த ‘சந்திர லேகா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். அதன் பிறகு சில படங்களில் நடித்தவர், திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை நிறுத்தினார். இரண்டு திருமணங்கள் விவாகரத்தில் முடிய, தனது 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார் வனிதா. இவரது மகன் அப்பாவுடன் இருக்கிறார்.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட வனிதா, ரசிகர்களிடம் பெரும் பாப்புலரானார். அதன் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு டைட்டிலை தட்டிச் சென்றார். இதற்கிடையே கடந்த ஜூன் மாதத்தில் கொரோனா ஊரடங்கின் போது பீட்டர்பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் சில தினங்களிலேயே அவர் குடிக்கு அடிமையாக இருப்பதாகவும், இதனால் தான் நிறைய பிரச்னைகளை எதிர்க்கொண்டு வருவதாகவும் கூறி, அவரிடமிருந்து விலகினார். பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த வனிதா, தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

அனல் காற்று’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் அடுத்ததாக ‘2 கே அழகானது காதல்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இது தவிர பிரசாந்த் – சிம்ரன் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘அந்தகன்’ படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். அதோடு இயக்குநர் வசந்த பாலன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்கிறார். இந்தப் படத்தில் ‘மாஸ்டர்’ பட வில்லன் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்கிறார்.

வனிதாவுக்கு குவிந்து வரும் பட வாய்ப்புகளால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே