பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஆந்திரா புதிய சட்டம்..!!

பாலியன் குற்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு இனி 21 நாட்களில் தண்டனை வழங்கப்படும் என்ற புதிய சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது ஆந்திர அரசு.

மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் குற்றவாளிகளுக்கு குற்றம் நடந்த 21 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என ஆந்திரா சட்டம் கொண்டு வந்துள்ளது.

திஷா சட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ள இச்சட்டம் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்க உதவும் எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில் தெலங்கானாவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் சம்பவம் நாட்டின் பல பகுதிகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Disha Act

புதிய திஷா சட்டம் குறித்து ஜெகன் மோகன் ரெட்டி கூறுகையில், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 14 நாட்களில் விசாரணை முடிக்கப்பட்டு இனி 21 நாட்களில் மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றார்.

மேலும் இதே திஷா சட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடுவோருக்கும் தண்டனைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை இக்குற்றத்துக்கு விதிக்கப்பட உள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 10 முதல் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே