இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சர்வதேச எல்லையில், இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை: பஞ்சாபின் தர்ன் தாரன் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சர்வதேச எல்லை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாட்டம் உள்ளதை வீரர்கள் கண்டறிந்தனர்.

அவர்கள், இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி செய்யும் வகையில், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அதற்கு, நமது தரப்பில், பதிலடி கொடுத்தனர். அதில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே