மயிலாடுதுறையில் அச்சத்தை ஏற்படுத்திய வெடிச்சத்தம் – வட்டாட்சியர் விளக்கம்..!!

மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதற்கு ராணுவ பயிற்சி விமானம்தான் காரணம் என்று வட்டாட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

மயிலாடுதுறையில் சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார், கொள்ளிடம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது குறித்து மாவட்ட வட்டாட்சியர் பிரான்சுவா விளக்கம் அளித்துள்ளார்.

பயங்கர சத்தம் கேட்டதாக வந்த புகாரினை அடுத்து, கோவாங்குடியில் நேரில் ஆய்வு செய்த வட்டாட்சியர் பிரான்சுவா, இந்த வெடிச்சத்தம் ஏற்பட ராணுவ விமானம்தான் காரணம்.

அந்த நேரத்தில் நில அதிர்வு எதுவும் பதிவாகவில்லை.

ராணுவ விமானத்தில் ஏர்லாக் விடுவிக்கும்போது உண்டானதே இந்த பயங்கர சத்தம் மற்றும் நில அதிர்வு. எனவே மக்களுக்கு அச்சம் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே